13 July 2010

மீனாட்சியம்மன் கோவில்

மீனாட்சியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம்
தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்கான கோவில்களில் மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புடைய ஒன்றாகும். இக்கோயில் அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

[தொகு] கோயில் வரலாறு

மதுரை மீனாட்சியம்மன்
கோயிலின் ஒரு தோற்றம்
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனைக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

[தொகு] கோயிலின் அமைப்பு

மதுரை மீனாட்சியம்மன்
கோயிலின் ஒரு தோற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)
மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

[தொகு] தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

[தொகு] சிறப்பு விழாக்கள்

மதுரை மீனாட்சியம்மன்
கோயில் 1858 புனரமைப்பின் போது
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சித்திரை
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
வைகாசி
வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.
ஆனி
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆடி
ஆடி மாதத்தில் ஆயில்ய நக்ஷத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.
ஆவணி
ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.
புரட்டாசி
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி அலங்கரிக்கப்படுகிறார்.
ஐப்பசி
ஐப்பசி மாதப் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம் நடக்கிறது.
கார்த்திகை
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.
மார்கழி
மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.
தை
தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.
மாசி
மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. இது கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்லலாம்.
பங்குனி
பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மேலும், இங்கு தினசரி பூஜைகள் செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன

[தொகு] சிறப்புக்கள்

  • சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
  • சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
  • சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
  • சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
  • இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
  • ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
  • இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
  • நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
  • மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.
  • மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.
  • இங்குள்ள சிவன் சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பிரகதீசுவரர் ஆலயம்*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
Thanjavur Tower.jpg
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
வகை காலச்சாரம் சார்
ஒப்பளவு ii, iii
மேற்கோள் 250
பகுதி ஆசியா-பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987  (11வது அமர்வு)

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் [1] அல்லது தஞ்சை பெரிய கோயில் [2] தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது[3]
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது[4].

பொருளடக்கம்

[மறை]

[தொகு] மத்திய சோழர் காலம்

கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்றழைக்கலாம், இந்தக் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்கள் கட்டப்பட்டன.

[தொகு] கோயில் அமைப்பு

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்
இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial)மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
மேலேயும் கீழேயும் பத்மதளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.

[தொகு] கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தஞ்சை பெரிய கோயில், இன்னொரு தோற்றம்
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.

ஆலயத்தினைப் பற்றி அதன் வாயிலில் உள்ள செய்திப்பலகை
இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

[தொகு] நந்தி

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.[5]

11 July 2010

மறுமுறை காற்று வீசுமா..!

 மறுமுறை காற்று வீசுமா..!
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

திருக்குறள்

 

திருக்குறள்

அறவாழி- தனக்குவமை- பொறிவாயில்- இருள்சேர்- வேண்டுதல்- மலர்மிசை- கற்றதனால்- அகர- துப்பார்க்குத்- விண்இன்று- ஏரின்- கெடுப்பதூஉம்- விசும்பின்- நெடுங்கடலும்- சிறப்பொடு- தானம்- நீர்இன்று- துறந்தார்- இருமை- உரனென்னும்- ஐந்தவித்தான்- செயற்கரிய- சுவைஒளி- நிறைமொழி- குணமென்னும்- அந்தணர்- அறத்தினூஉங்கு- ஒல்லும்- மனத்துக்கண்- அழுக்காறு- அன்றறிவாம்- அறத்தாறு- வீழ்நாள்- அறத்தான்- செயற்பால- துறந்தார்க்கும்- தென்புலத்தார்- பழியஞ்சிப்- அன்பும்- அறத்தாற்றின்- இயல்பினான்- ஆற்றின்- அறன்- வையத்துள்- மனைமாட்சி- இல்லதென்- பெண்ணின்- தெய்வம்- தற்காத்துத்- சிறைகாக்கும்- பெற்றாற்- புகழ்புரிந்த- மங்கலம்- எழுபிறப்பும்- தம்பொருள்- அமிழ்தினும்- மக்கள்மெய்- குழல்- தந்தை- தம்மின்தம்- ஈன்ற- மகன்தந்தைக்கு- அன்பிலார்- அன்போடு- அன்பு- அன்புற்று- அறத்திற்கே- என்பி- அன்பகத்- புறத்துறுப்- அன்பின்- விருந்து- வருவிருந்து- அகனமர்ந்து- வித்தும்- செல்விருந்து- இனைத்துணைத்- பரிந்தோம்பிப்- உடைமையுள்- மோப்பக்- அகன்அமர்ந்து- முகத்தான்- துன்புறூஉம்- பணிவுடையன்- அல்லவை- நயன்- சிறுமையுவு- இன்சொல்- இனிய- காலத்தி- பயன்தூக்கார்- தினைத்துணை- உதவி- மறவற்க- எழுமை- நன்றி- கொன்றன்ன- எந்நன்றி- செப்பம்- நன்றே- தக்கார்- கேடும்- கெடுவல்யான்- கெடுவாக- சமன்செய்து- சொற்கோட்டம்- வாணிகம்- காக்க- செறிவறிந்து- நிலையின்- எல்லார்க்கும்- ஒருநம்யுள்- யாகாவா- ஒன்றானுந்- தீயினாற்- கதங்காத்துக்- பரிந்தோம்பிக்- ஒழுக்கம்- மறப்பினும்- அழுக்கா- ஒழுக்கத்தின்- நன்றிக்கு- ஒழுக்க- உலகத்தோடு- அறன்கடை- விளிந்தா??ன்- எனைத்துணையர்- எளிதென- பகைபாவம்- அறனியலான்- பிறன்மனை- நலக்குரியார்- அறன்வரையான்- பொறுத்தல்- இன்நம்யுள்- நிறையுடைமை- ஒறுத்தாரை- ஒறுத்தார்க்கு- திறனல்ல- மிகுதியான்- துறந்தாரின்- உண்ணாது- விழுப்பேற்றின்- அறன்ஆக்கம்- அழுக்காற்றின்- கொடுப்பது- அவ்வித்து- அவ்விய- அழுக்கற்று- படுபயன்- சிற்றின்பம்- இலமென்று- அ?கி- அருள்வெ?கி- வேண்டற்க- அ?காமை- அறனறிந்து- இறலீனும்- அறனழீஇ- புறங்கூறிப்- கண்ணின்று- அறஞ்சொல்லும்- பிறன்பழி- பகச்சொல்லிக்- துன்னியார்- அறன்நோக்கி- ஏதிலார்- பயனில- நயனிலன்- நயன்சாரா- சீர்மை- பயனில்- நயனில- அரும்பயன்- பொருள்தீர்ந்த- சொல்லுக- தீயவை- அறிவினுள்- மறந்தும்- இலன்- தீப்பால- எனைப்பகை- தன்னைத்தான்- அருங்கேடன்- தாளாற்றித்- புத்தே- ஒத்த- ஊருணி- பயன்மரம்- மருந்தாகித்- இடனில்- நயனுடையான்- ஒப்புரவி- நல்லாறு- இலனென்னும்- இன்னாது- ஆற்றுவார்- அற்றார்- பாத்தூண்- ஈத்துவக்கும்- இரத்தலின்- சாதலின்- உரைப்பார்- ஒன்றா- நிலவரை- நத்தம்போல்- தோன்றின்- புகழ்பட- வசையென்ப- வசையிலா- வசையொழிய- இல்லறவியல்- நல்லாற்றாள்- அருள்சேர்ந்த- மன்னுயிர்- அல்லல்- பொருள்நீங்கிப்- அருளில்லார்க்கு- பொருளற்றார்- தெருளாதான்- வலியார்முன்- பொருளாட்சி- படைகொண்டார்- ருளல்லது- உண்ணாமை- தினற்பொருட்டால்- செயிரின்- அவிசொரிந்- கொல்லான்- தவமும்- துறந்தார்க்குத்- ஒன்னார்த்- வேண்டிய- தவஞ்- சுடச்சுடரும்- தன்னுயிர்- கூற்றம்- இலர்பல- வானுயர்- வலியில்- தவமறைந்து- பற்றற்றேம்- நெஞ்சின்- புறங்குன்றி- மனத்தது- கணைகொடிது- மழித்தலும்- உள்ளத்தால்- களவினால்- களவின்கண்- அருள்கருதி- அளவின்கண்- களவென்னும்- அளவற?ந்தார்- அளவல்ல- கள்வார்க்குத்- பொய்மையும்- தன்நெஞ்- உள்ளத்தாற்- மனத்தொடு- பொய்யாமை- புறள்தூய்மை- எல்லா- யாமெய்யாக்- செல்லா- மறத்தல்- நகையும்- சினமென்னும்- சினத்தைப்- இணர்எரி- உள்ளிய- இறந்தார்- கறுத்துஇன்னா- செய்யாமல்- இன்னாசெய்- அறிவினான்- இன்னா- எனைத்தானும்- தன்னுயிர்ககு- பிறர்க்கின்னா- நோயெல்லாம்- பகுத்துண்டு- ஒன்றாக- நிலைஅஞ்சி- கொல்லாமை- நன்றாகும்- கொலைவினைய- உயிர்- கூத்தாட்டு- அற்கா- நாளென- நாச்செற்று- நெருநல்- ஒருபொழுதும்- குடம்பை- உறங்கு- புக்கில்- வேண்டின்- அடல்வேண்டும்- இயல்பாகும்- மற்றும்- யான்- பற்றி- தலைப்பட்டார்- பற்றற்ற- பற்றுக- இருள்நீங்கி- ஐயத்தின்- ஐயுணர்வு- எப்பொருள்- கற்றீண்டு- ஓர்த்துள்ளம்- பிறப்பென்னும்- சார்புணர்ந்து- காமம்- வேண்டுங்கால்- வேண்டாமை- தூஉய்மை- அற்றவர்- அஞ்சுவ- அவாவினை- அவாஇல்லார்க்- இன்பம்- ஆரா- பேதைப்- நுண்ணிய- இருவேறு- நல்லவை- பரியினும்- வகுத்தான்- துறப்பார்மன்- நன்றாங்கால்- ஊழிற்- ஊழியல்- அஞ்சாமை- தூங்காமை- அறனிழுக்கா- இயற்றலும்- காட்சிக்- இன்சொலால்- முறைசெய்து- செவிகைப்பச்- கொடையளி- எண்ணென்ப- கண்ணுடையர்- உவப்பத்- உடையார்முன்- தொட்டனைத்- யாதானும்- ஒருமைக்கண்- தாமின்- கேடில்- கல்லாதான்- கல்லா- உளரென்னும்- நுண்மாண்- நல்லார்கண்- மேற்பிறந்தா- விலங்கொடு- செவுக்குண- செவியுணவிற்- கற்றில- இழுக்கல்- பிழைத்- கேட்பினுங்- நுணங்கிய- செவியிற்- சென்ற- எண்பொருள- உலகம்- எவ்வ- அறிவுடையார்- எதிரதாக்- இவறலும்- தினைத்துணையாங்- குற்றமே- வருமுன்னர்க்- தன்குற்றம்- பற்றுள்ளம்- வியவற்க- காதல- உற்றநோய்- அரியவற்று- தம்மிற்- சூழ்வார்கண்- தக்கா- இடிக்குந்- இடிப்பாரை- முதலிலார்க- பல்லார்- நிலத்தியல்பால்- மனத்தானாம்- மனத்து- மனந்தூய்மை- மனந்தூயார்க்- மனநலம்- மனநலத்தின்- நல்லினத்தி- தெரிந்த- ஆக்கம்- தெளிவி- வகையறச்- செய்தக்க- எண்ணித்- நன்றாற்ற- எள்ளாத- ஒல்வ- உடைத்தம்- அமைந்தாங்- பீலிபெய்- நுனிக்கொம்பர்- ஆகாறு- அளவற?ந்து- உளவரை- பருவத்தோடு- அருவினை- ஞாலம்- காலம்- ஊக்க- பொள்ளென- செறுநரைக்- எய்தற்- கொக்கொக்க- முரண்சேர்ந்த- ஆற்றாரும்- எண்ணியார்- நெடும்புனலுள்- கடலோடா- சிறுபடையான்- சிறைநலனும்- காலாழ்- குடிப்பிறந்து- அரியகற்று- குணம்நாடிக்- பெருமைக்கும்- அற்றாரைத்- காதன்மை- தேரான்- தே- வாரி- அன்பறிவு- எனைவகையான்- அறிந்தாற்றிச்- செய்வானை- இதனை- வினைக்- வினைக்கண்- நாடோ- விருப்பறாச்- அளவளா- சுற்றத்தால்- கொடுத்தலும்- பெருங்கொடையான்- காக்கை- பொதுநோக்கான்- தமராகிக்- உழைப்பிரிந்து- பொச்சாப்புக்- பொச்சாப்பார்க்- அச்ச- முன்னுறக்- இழுக்காமை- அரியஎன்று- புகழ்ந்தவை- இகழ்ச்சியின்- உள்ளியது- வானோக்கி- குடிதழீஇக்- இயல்புளிக்- வேலன்று- இறைகாக்கும்- எண்பதத்தான்- குடிபுறங்- கொலையிற்- வேலொடு- நாடொறும்- கூழுங்- அல்லற்பட்டு- மன்னர்க்கு- துளியின்மை- இன்மையின்- முறைகோடி- ஆபயன்- கடிதோச்சி- வெருவந்த- இறைகடியன்- அருஞ்செவ்வி- கடுஞ்சொல்லன்- கடுமொழியும்- இனத்தாற்றி- செருவந்த- கல்லார்ப்- கண்ணோட்டத்- பண்என்னாம்- உளபோல்- கண்ணிற்கு- மண்ணோ- கண்ணோட்- கருமம்- ஒறுத்தாற்றும்- பெயக்கண்டும்- ஒற்றினான்- வினைசெய்வார்- கடாஅ- மறைந்தவை- ஒற்றொற்றித்- ஒற்றெற்- சிறப்பறிய- உள்ளம்- க்கம்- வெள்ளத்- உள்ளுவ- சிதைவிடத்து- பரியது- உரமொருவற்கு- மடியை- மடிமடிக்- குடிமடிந்து- நெடுநீர்- படியுடையார்- இடிபுரிந்து- மடிமை- குடியாண்மை- மடியிலா- தாளாண்மை- முயற்சி- மடியுளாள்- பொறியின்மை- தெய்வத்தான்- ஊழையும்- இடும்பைக்கு- மடுத்தவா- அடுக்கி- அற்றேமென்று- இலக்கம்- இன்பத்துள்- இன்னாமை- அரசியல்- வன்கண்- பிரித்தலும்- தெரிதலும்- மதிநுட்பம்- செயற்கை- அறிகொன்று- பழுதெண்ணும்- முறைப்படச்- ஆக்கமுங்- கேட்டார்ப்- திறனறிந்து- வேட்பத்தாஞ்- சொலல்வல்லன்- விரைந்து- பலசொல்லக்- இண்ருழ்த்தும்- என்றும்- ஒஓதல்- இடுக்கண்- எற்றென்று- ஈன்றாள்- பழிமலைந்து- கடிந்த- அழக்- சலத்தால்- ஊறொரால்- கடைக்கொட்கச்- சொல்லுதல்- வீறெய்தி- எண்ணிய- உருவுகண்டு- கலங்காது- துன்பம்- எனைத்திட்பம்- தூங்குக- ஙல்லும்வா- வினைபகை- பொருள்கருவி- முடிவும்- செய்வினை- வினையான்- நட்டார்க்கு- உறைசிறியார்- நூலாருள்- அறிவுரு- தொகச்- கற்றுக்கண்- கடனறிந்து- தூய்மை- விடுமாற்றம்- இறுதி- மன்னர்- போற்றின்- செவிச்சொல்லும்- எப்பொருளும்- குறிப்பறிந்து- வேட்பன- இளையர்- கொளப்பட்டேம்- பழையம்- ஐயப்- குறிப்பிற்- குறித்தது- அடுத்தது- முகத்தின்- முகம்நோக்கி- பகைமையும்- நுண்ணியம்- இடைதெரிந்து- அவையறியார்- ஒளியார்முன்- நன்றென்ற- கற்றறிந்தார்- உணர்வ- புல்லவையுள்- அங்கணத்துள்- கற்றாருள்- பகையகத்துச்- கற்றார்முன்- வாளொடென்- பகையகத்துப்- பல்லவை- உளரெனினும்- அமைச்சியல்- பெரும்பொருளால்- பொறையொருங்கு- உறுபசியும்- பல்குழுவும்- கேடறியாக்- இருபுனலும்- பிணியின்மை- நாடென்ப- ஆங்கமை- மணிநீரும்- உயர்வகலம்- சிறுகாப்பிற்- கொளற்கரிதாய்க்- எல்லாப்- முற்றியும்- முற்றாற்றி- முனைமுகத்து- எனைமாட்சித்- இல்லாரை- பொருளென்னும்- அறன்ஈனும்- அருளொடும்- உறுபொருளும்- அருளென்னும்- குன்றேறி- செய்க- ஒண்பொருள்- உலைவிடத்து- ஒலித்தக்கால்- அழிவின்றி- கூற்றுடன்று- மறமானம்- தார்தாங்கிச்- அடல்தகையும்- சிறுமையும்- நிலைமக்கள்- கான- பேராண்மை- கைவேல்- விழித்தகண்- விழுப்புண்- சுழலும்- உறின்உயிர்- இழைத்தது- புரந்தார்கண்- நவில்தொறும்- நகுதற்- புணர்ச்சி- முகநக- அழிவி- உடுக்கை- நட்பிற்கு- இனையர்- ஆய்ந்தாய்ந்து- குணமும்- அழச்சொல்லி- கேட்டினும்- ஊதியம்- உள்ளற்க- கெடுங்காலைக்- மருவுக- நட்பிற்- பழகிய- விழைதகையான்- பேதைமை- எல்லைக்கண்- அழிவந்த- கேளிழுக்கம்- கெடாஅ- விழையார்- நிறைநீர- உறுவது- அமரகத்து- செய்தேமஞ்- பேதை- நகைவகைய- கனவினும்- எனைத்தும்- இனம்போன்று- பலநல்ல- மனத்தின்- நட்டார்போல்- சொல்வணக்கம்- தொழுதகை- மிகச்செய்து- பகைநட்பாம்- பேதைமையுள்- நாணாமை- ஓதி- ஒருமைச்- பொய்படும்- மையல்- பெரிதினிது- கழாஅக்கால்- அறிவிலான்- அறிவிலார்- வெண்மை- கல்லாத- அற்றம்- அருமறை- ஏவவும்- காணாதான்- உலகத்தார்- பகல்கருதிப்- இகலென்னும்- இகலெதிர்- இகலின்- மிகல்மேவல்- இகலிற்கு- இகல்காணான்- இகலானாம்- அன்பிலன்- அஞ்சும்- நீங்கான்- வழிநோக்கான்- காணாச்- கொடுத்தும்- குணனிலனாய்க்- செறுவார்க்குச்- கல்லான்- வில்லேர்- ஏமுற்- பகைநட்பாக்- தன்துணை- தேற?னும்- நோவற்க- வகையறிந்து- இளைதாக- உயிர்ப்ப- வாள்போல- உட்பகை- மனமாணா- உறல்முறையான்- ஒன்றாமை- செப்பின்- அரம்பொருத- எட்பக- உடம்பாடு- பெரியாரைப்- கெடல்வேண்டின்- கூற்றத்தைக்- யாண்டுச்- எரியால்- வகைமாண்ட- குன்றன்னார்- ஏந்திய- இறந்தமைந்த- பேணாது- இல்லாள்கண்- மனையாளை- இல்லாளை- இமையாரின்- பெண்ணேவல்- நட்டார்- அறவினையும்- எண்சேர்ந்த- பயன்தூக்கிப்- பொருட்பெண்டிர்- பொருட்பொருளார்- பொதுநலத்தார்- தந்நலம்- நிறைநெஞ்சம்- ஆயும்- வரைவிலா- இருமனப்- உண்ணற்க- நாண்என்னும்- கையறி- துஞ்சினார்- உள்ளொற்றி- களித்தறியேன்- களித்தானைக்- கள்ளுண்ணாப்- ஒன்றெய்தி- உருளாயம்- சிறுமை- கவறும்- அகடாரார்- பொருள்- உடைசெல்வம்- இழத்தொறூஉம்- மருந்தென- அற்றால்- அற்றது- மாறுபாடு- இழிவறிந்து- தீயள- நோய்நாடி- உற்றான்- உற்றவன்- ஒழுக்கமும்- நகைஈகை- அடுக்கிய- வழங்குவ- சலம்பற்றிச்- குடிப்பிறந்தார்- நலத்தின்கண்- நிலத்தில்- நலம்வேண்டின்- சீரினும்- பெருக்கத்து- தலையின்- குன்றின்- புகழ்இன்றால்- ஒட்- மருந்தோமற்று- மயிர்நீப்பின்- இளிவரின்- பிறப்பொக்கும்- மேலிருந்தும்- ஒருமை- பெருமை- சிறியார்- இறப்பே- பணியுமாம்- குணநலம்- அன்புநாண்- கொல்லா- சால்பிற்குக்- இன்மை- ஊழி- சான்றவர்- அன்புடைமை- உறுப்பொத்தல்- யனொடு- நகையுள்ளும்- பண்புடையார்ப்- அரம்போலும்- நண்பாற்றார்- நகல்வல்லர்- ண்பிலான்- பொருளானாம்- ஈட்டம்- எச்சமென்று- கொடுப்பதூஉம்- ஏதம்- அற்றார்க்கொன்று- நச்சப்- அன்பொரீஇத்- சீருடைச்- ஊணுடை- ஊனைக்- அணிஅன்றோ- பிறர்பழியும்- நாண்வேலி- நாணால்- பிறர்நாணத்- குலஞ்சுடும்- நாண்அகத்- ஆள்வினையும்- குடிசெய்வல்- சூழாமல்- குற்றம்- நல்லாண்மை- குடிசெய்வார்க்- இடும்பைக்கே- இடுக்கண்கால்- உழுவார்- உழுதுண்டு- பலகுடை- இரவார்- உழவினார்- தொடிப்புழுதி- ஏரினும்- செல்லான்- தொல்வரவும்- இற்பிறந்தார்- நல்குரவு- நற்பொருள்- அறஞ்சாரா- இன்றும்- நெருப்பினுள்- துப்புர- கரப்பிலா- இரத்தலும்- கரப்பிலார்- கரப்பிடும்பை- இகழ்ந்தெள்ளாது- இரப்பாரை- ஈவார்கண்- இரப்பான்- இரந்தும்- இடமெல்லாம்- தெண்ணீர்- ஆவிற்கு- இரப்பன்- இரவென்னும்- இரவுள்ள- கரப்பவர்க்கு- நன்றறி- தேவர்- அகப்பட்டி- அச்சமே- அறைபறை- ஈர்ங்கை- சொல்லப்- உடுப்பதூஉம்- எற்றிற்- ஒழிபியல்- நோக்கினாள்- பண்டறியேன்- கண்டார்- கூற்றமோ- கொடும்புருவம்- கடாஅக்- ஒண்ணுதற்- பிணையேர்- உண்டார்கண்- கண்களவு- யான்நோக்கும்- குறிக்கொண்டு- உறாஅ- செறாஅச்- அசையியற்கு- கண்ணொடு- பிணிக்கு- தாம்வீழ்வார்- நீங்கின்- வேட்- உறுதோறு- தம்மில்- வீழும்- ஊடல்- அறிதோறு- மலர்காணின்- முறிமேனி- காணின்- அனிச்சப்பூக்- மதியும்- அறுவாய்- மாதர்- மலரன்ன- அனிச்சமும்- உடம்பொடு- கருமணியிற்- வாழ்தல்- உள்ளுவன்- கண்ணுள்ளின்- கண்ணுள்ளார்- நெஞ்சத்தார்- இமைப்பின்- உவந்துறைவர்- நோனா- நாணொடு- காமக்- தொடலைக்- மடலூர்தல்- கடலன்ன- நிறையரியர்- அறிகிலார்- யாம்கண்ணின்- உறாஅதோ- கவ்வையால்- களித்தொறும்- கண்டது- ஊரவர்- நெய்யால்- அலர்நாண- தாம்வேண்டின்- களவியல்- இன்கண்- அரிதரோ- அளித்தஞ்சல்- ஓம்பின்- பிரிவுரைக்கும்- துறைவன்- தொடிற்சுடின்- அரிதாற்றி- கரத்தலும்- காமமும்- துப்பின்- ,- உள்ளம்போன்று- தெரிந்துணரா- கதுமெனத்- பெயலாற்றா- படலாற்றா- ஓஒ- உழந்துழந்- வாராக்கால்- மறைபெறல்- அவர்தந்தார்- சாயலும்- உவக்காண்எம்- விளக்கற்றம்- புல்லிக்- பசந்தாள்- பசக்கமன்- பசப்பெனப்- வாழ்வார்க்கு- வீழுநர்- வீழப்- நாம்காதல்- ஒருதலையான்- பருவரலும்- வீழ்வாரின்- நசைஇயார்- உறாஅர்க்கு- எனைத்தொனறு- நினைப்பவர்- யாமும்- தம்நெஞ்சத்து- மற்றியான்- மறப்பின்- எனைத்து- விளியுமென்- விடாஅது- கயலுண்கண்- நனவினால்- கனவினான்- நனவென- துஞ்சுங்கால்- புன்கண்ணை- பனிஅரும்பிப்- காதலர்- காலைக்குச்- மாலைநோய்- காலை- அழல்போலும்- பதிமருண்டு- பொருள்மாலை- நயந்தவர்- தணந்தமை- பணைநீங்கிப்- கொடியார்- தொடியொடு- பாடுபெறுதியோ- முயங்கிய- முயக்கிடைத்- கண்ணின்- காதல்- இருந்துள்ளி- கண்ணும்- செற்றார்- கலந்துணர்த்தும்- பரிந்தவர்- உள்ளத்தார்- துன்னாத்- மறைப்பேன்மன்- நிறையுடையேன்- செற்றார்பின்- செற்றவர்- நாணென- பன்மாயக்- புலப்பல்- நிணந்தீயில்- இலங்கிழாய்- உரன்நசைஇ- கூடிய- காண்கமன்- வருகமன்- புலப்பேன்கொல்- வினைகலந்து- ஒருநாள்- பெறின்என்னாம்- கண்ணிறைந்த- மணியில்- முகைமொக்குள்- செறிதொடி- பெரிதாற்றிப்- தண்ணந்- நெருநற்றுச்- தொடிநோக்கி- பெண்ணினால்- தினைத்துணையும்- ஊடற்கண்- எழுதுங்கால்- காணுங்கால்- உய்த்தல்- இளித்தக்க- மலரினும்- கெட்டார்க்கு- இனிஅன்ன- பெறாஅமை- தனியே- நாணும்- எள்ளின்- தஞ்சம்- உப்பமைந்- அலந்தாரை- ஊடி- நலத்தகை- துனியும்- ஊடலின்- நோதல்- நீரும்- கோட்டுப்- யாரினும்- இம்மைப்- உள்ளினேன்- வழுத்தினாள்- தும்முச்- தன்னை- நினைத்திருந்து- புலத்தலின்- புல்லி- தவறிலர்- உணலினும்- ஊடலில்- ஊடிப்- ஊடுக- ஊடுதல்- கோளில்- பிறவிப்-