28 August 2010
24 August 2010
மு. க. ஸ்டாலின்
மு. க. ஸ்டாலின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
| மு.க. ஸ்டாலின் | |
![]() மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் | |
| | |
| தொகுதி | ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) |
|---|---|
| அரசியல் கட்சி | தி.மு.க |
| கட்சி பொறுப்பு | பொருளாளர் |
| | |
| பிறப்பு | மார்ச் 1 1953 (அகவை 57) சென்னை, தமிழ்நாடு |
| கல்வி | இளங்கலைமானி அரசியல் |
| வாழ்க்கைத் துணை | துர்கா |
| பிள்ளைகள் | உதய்,செந்து சாப் |
| இருப்பிடம் | சென்னை |
| இணையத்தளம் | www.mkstalin.net |
பொருளடக்கம்[மறை] |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
1953 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் [2] [3]எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[3].[தொகு] பள்ளிப்பருவம்
ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை சேத்துபட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.[தொகு] அரசியல் வாழ்க்கை
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர்.[தொகு] மாநிலச் செயலாளர்
இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது [2]. 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.[தொகு] சிறை செல்லல்
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்[2].[தொகு] இளைஞரணி தலைமையகம்
திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்[2].[தொகு] தேர்தலில் தோல்வி
ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்[2]. அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.[தொகு] மேயர்
இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்[2].
[தொகு] மேம்பாலங்கள்
மேயராக இருந்து ஸ்டாலின் சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டினார். அவர் சாதனைகளில் சில:- பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன[4].
| வ.எண் | அமைந்துள்ள இடம் | பாலம் |
|---|---|---|
| 1 | பீட்டர்ஸ் சாலை | கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு |
| 2 | பீட்டர்ஸ் சாலை | வெஸ்ட்கார்ட் சந்திப்பு |
| 3 | பாந்தியன் சாலை | காசா மேஜர் சந்திப்பு |
| 4 | புரசைவாக்கம் செடுஞ்சாலை | பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பு |
| 5 | டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை | ராயப்பேட்டை செடுஞ்சாலை |
| 6 | டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை | டி டி கே சாலை |
| 7 | டி டி கே சாலை சந்திப்பு | சி பி ராமசாமி சாலை சந்திப்பு |
| 8 | சர்தார் பட்டேல் சாலை | லாட்டீஸ் பாலம் சாலை சந்திப்பு |
| 9 | சர்தார் பட்டேல் சாலை | காந்தி மண்டபம் சாலை சந்திப்பு |
[தொகு] மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்தல்
மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரத்தை பற்றி நன்மதிப்பை உருவாக்கவும் முக்கிய நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார்.[5].ஏழைக்குழந்தைகளின் வசதிக்காக, தனியார் பள்ளிகளில் மட்டுமே இவ்வசதி ஏற்படுத்தபட்டு இருந்த நிலை மாறி மழலையர் பள்ளிகளை மாநகராட்சிகளில் இளம்நிலை (எல்.கே.ஜி), மேல்நிலை (யூ.கே.ஜி), விளையாட்டுத்துறை என 30 வகுப்புகளுடன், 132 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டன[5].
[தொகு] மேயர் பதவி பறிப்பு
2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[2][6][7]. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்[2].[தொகு] அமைச்சர்
மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்[2].[தொகு] அரசியல் வளர்ச்சி
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் அதீத வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது அவருடைய ஆதரவாளர்களால் கருதப்பட்டது[2]. ஆனாலும் கால ஒட்டத்தில், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்றும் கூடக் கூறப்படுகின்றது.
இருப்பினும் சொந்த சகோதரரான மு.க. அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் குழப்பம்[2]. நிலவியது. ஆனால் இதையும் கூட கட்சித் தலைமை படுசாதுர்யமாக சமாளித்த்து. இருவருக்கும் இடையில் நிலவிய பூசலை தணித்து, இருவரையும் சேர்ந்து செயல்பட கட்சித்தலைமை பணித்தது.
தோற்றம்
மு.க. ஸ்டாலினை 40 வயதுக்கு மேல் மதிக்க முடியாத அளவுக்கு தன்னுடைய தோற்றம் பலரையும் வியப்படைய வைக்கும் விதத்தில் உடற்பயிற்சியை தினசரி தவறாமல் மேற்கொண்டு வருபவர்[2]. பொழுதுபோக்குஸ்டாலின் மரப்பந்தாட்டம் , கணிணி விளையாட்டு, பூபந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். தந்தையைப் போலவே மரப்பந்தாட்டம் [2] மீது தனியாத ஆர்வம் கொண்டவர்.
வெளி இணைப்புகள்
- மு.க. ஸ்டாலின் அலுவலக இணையத்தளம்
- திமுக அலுவலக இணையத்தளம்
- தமிழ்நாடு அரசு அமைச்சரவை-அரசு அலுவலக இணையத்தளம்
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை-தன்குறிப்பு
- துணை முதலவருக்கு வாழ்த்துக்கள் தினமணி தலையங்கம்
- துணை முதல்வர் ஸ்டாலின் இந்து நாளிதழ் தலையங்கம்
[தொகு
மு. கருணாநிதி
மு. கருணாநிதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
| முத்துவேல் கருணாநிதி | |
![]() மாண்புமிகு தமிழக முதலமைச்சர் | |
| தமிழ்நாட்டு முதலமைச்சர் | |
| தொகுதி | சேப்பாக்கம் |
|---|---|
| அரசியல் கட்சி | தி.மு.க. |
| கட்சி பொறுப்பு | தலைவர் |
| | |
| பிறப்பு | ஜூன் 3 1924 (அகவை 86) திருக்குவளை, தமிழ்நாடு |
| வாழ்க்கைத் துணை | பத்மாவதி தயாளு ராசாத்தி |
| பிள்ளைகள் | முத்து அழகிரி இசுடாலின் செல்வி தமிழரசு கனிமொழி |
| இருப்பிடம் | சென்னை |
| ஜூன் 14 இன் படியான தகவல், 2009 மூலம்: தமிழ்நாடு அரசு | |
பொருளடக்கம்[மறை] |
இளமைப்பருவம்
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.
[தொகு] அரசியல்
[தொகு] மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.[தொகு] முரசொலி நாளிதழ்
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.[தொகு] இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: மொழிப்போராட்டம்”.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்கள்து கட்சியின் அரசியல் கொள்கை..“ மேலும்”இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்து செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கபட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றும் அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யபட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.[தொகு] பொருளாளர்
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன், பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
- 1969-1971 -- கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
- 1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
- 1989-1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
- 1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
- 2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி
[தொகு] விமர்சனங்கள்
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[1],[2] [3] 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன் [4] [5] 1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. .
2008 - 2009 இல் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழரும் தமிழுமே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி அரசியல் வாழ்க்கை நடத்தி வந்த கருணாநிதி, ராஜீவ் காந்தி படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது. இக்கொடுமையைக் கண்டு கை பிசைந்து நிற்பதை விட தம்மால் வேறொன்றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகவே கூறிக்கொண்டார்.[1]. இதன் விளைவாக அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
[தொகு] குடும்பம்
| மனைவிகள்
| மகன்கள்
| மகள்கள்
|
[தொகு] தனிப்பட்ட வாழ்க்கை
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.
[தொகு] திரைப்படப் பணி
[தொகு] கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்
- கண்ணம்மா
- மண்ணின் மைந்தன்
- பராசக்தி
- புதிய பராசக்தி
- மந்திரிகுமாரி
- பாலைவனப்பூக்கள்
- மனோகரா
- உளியின் ஓசை
- பூம்புகார்
[தொகு] மேடை நாடகங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமகுடம்
- ஒரே ரத்தம்
- பழனியப்பன்
- தூக்கு மேடை
- காகிதப்பூ
- நானே அறிவாளி
- வெள்ளிக்கிழமை
- உதயசூரியன்
[தொகு] புத்தகங்கள்
- குறளோவியம்
- நெஞ்சுக்கு நீதி
- தொல்காப்பிய உரை
- சங்கத் தமிழ்
- ரோமாபுரி பாண்டியன்
- தென்பாண்டி சிங்கம்
- வெள்ளிக்கிழமை
- இனியவை இருபது
- சங்க தமிழ்
- பொன்னார் சங்கர்
- திருக்குறள் உரை
[தொகு] புகைப்படக் காட்சிகள்
| தமிழக முதல்வர் கருணாநிதி திருக்குவளையிலுள்ள தனது வீட்டில் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் | |||
| அறிஞர் அண்ணாதுரையுடன் மு. கருணாநிதி, இந்தி திரைக்கலைஞர் திலிப்குமார், திரைக்கலைஞர் எம்.ஜி.ஆர், ஈ.வெ.கி. சம்பத் - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை சிறப்பு விழாவில் பங்கு பெற்றபொழுது. (ஜி.என. செட்டி சாலை, தி.நகர்) | எம்.ஜி.ராமச்சந்திரன் கருணாநிதியுட (கையொப்பம் கலைஞர் கருணாநிதி) |
10 August 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
பாடல் வரிகள்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
Subscribe to:
Posts (Atom)













































