மு. கருணாநிதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| முத்துவேல் கருணாநிதி | |
![]() மாண்புமிகு தமிழக முதலமைச்சர் | |
| தமிழ்நாட்டு முதலமைச்சர் | |
| தொகுதி | சேப்பாக்கம் |
|---|---|
| அரசியல் கட்சி | தி.மு.க. |
| கட்சி பொறுப்பு | தலைவர் |
| | |
| பிறப்பு | ஜூன் 3 1924 திருக்குவளை, தமிழ்நாடு |
| வாழ்க்கைத் துணை | பத்மாவதி தயாளு ராசாத்தி |
| பிள்ளைகள் | முத்து அழகிரி இசுடாலின் செல்வி தமிழரசு கனிமொழி |
| இருப்பிடம் | சென்னை |
| ஜூன் 14 இன் படியான தகவல், 2009 மூலம்: தமிழ்நாடு அரசு | |
பொருளடக்கம்[மறை] |
இளமைப்பருவம்
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.
[தொகு] அரசியல்
[தொகு] மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.[தொகு] முரசொலி நாளிதழ்
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.[தொகு] இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: மொழிப்போராட்டம்”.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்கள்து கட்சியின் அரசியல் கொள்கை..“ மேலும்”இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்து செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கபட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றும் அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யபட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.[தொகு] பொருளாளர்
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன், பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
- 1969-1971 -- கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
- 1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
- 1989-1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
- 1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
- 2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி
[தொகு] விமர்சனங்கள்
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[1],[2] [3] 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன் [4] [5] 1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது..
2008 - 2009 இல் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழரும் தமிழுமே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி அரசியல் வாழ்க்கை நடத்தி வந்த கருணாநிதி, ராஜீவ் காந்தி படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது. இக்கொடுமையைக் கண்டு கை பிசைந்து நிற்பதை விட தம்மால் வேறொன்றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகவே கூறிக்கொண்டார்.[1]. இதன் விளைவாக அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
[தொகு] குடும்பம்
| மனைவிகள்
| மகன்கள்
| மகள்கள்
|
[தொகு] தனிப்பட்ட வாழ்க்கை
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.
[தொகு] திரைப்படப் பணி
[தொகு] கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்
- கண்ணம்மா
- மண்ணின் மைந்தன்
- பராசக்தி
- புதிய பராசக்தி
- மந்திரிகுமாரி
- பாலைவனப்பூக்கள்
- மனோகரா
- உளியின் ஓசை
- பூம்புகார்
[தொகு] மேடை நாடகங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமகுடம்
- ஒரே ரத்தம்
- பழனியப்பன்
- தூக்கு மேடை
- காகிதப்பூ
- நானே அறிவாளி
- வெள்ளிக்கிழமை
- உதயசூரியன்
[தொகு] புத்தகங்கள்
- குறளோவியம்
- நெஞ்சுக்கு நீதி
- தொல்காப்பிய உரை
- சங்கத் தமிழ்
- ரோமாபுரி பாண்டியன்
- தென்பாண்டி சிங்கம்
- வெள்ளிக்கிழமை
- இனியவை இருபது
- சங்க தமிழ்
- பொன்னார் சங்கர்
- திருக்குறள் உரை
[தொகு] புகைப்படக் காட்சிகள்
| தமிழக முதல்வர் கருணாநிதி திருக்குவளையிலுள்ள தனது வீட்டில் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் | |||
| அறிஞர் அண்ணாதுரையுடன் மு. கருணாநிதி, இந்தி திரைக்கலைஞர் திலிப்குமார், திரைக்கலைஞர் எம்.ஜி.ஆர், ஈ.வெ.கி. சம்பத் - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை சிறப்பு விழாவில் பங்கு பெற்றபொழுது. (ஜி.என. செட்டி சாலை, தி.நகர்) | எம்.ஜி.ராமச்சந்திரன் கருணாநிதியுட (கையொப்பம் கலைஞர் கருணாநிதி) |
