27 April 2011

நேசிக்கிறேன் எதிரிகளை!!.....................

நேசிக்கிறேன் எதிரிகளை!!


நேசிக்கிறேன் என்

எதிரிகளை!



வாழ்வில் வெற்றி

பெற நண்பன்

தேவை! - ஆனால்

வாழ்க்கை முழுவதும்

வெற்றி பெற

தேவை - எதிரிதான்!!



வெற்றிக்கு

உதவுபவன் நண்பன்

என்றால் - காரணம்

எதிரியல்லவா



நம்மைவிட

நண்பர்களை விட

நம் செயல்பாடுகளை

கணித்து - நம்மை

வெல்லத்துடிக்கும்

எதிரிகளை

நேசிக்கிறேன் !!



இலக்கை நோக்கி

ஓட உன்னை

உற்சாகபடுத்துபவன் தோழன்



தானும் உறங்காமல்

உன்னையும் உறங்கவிடாமல்

வெற்றியை நோக்கி

ஓட துரத்துபவன்

எதிரி !!



ஆதலால்

நேசிக்கிறேன் எதிரிகளை!!





__._,_.___

புரட்சி செய் !!................

புரட்சி செய் !!




                                                                    புரட்சி செய் !!

கோடி கோடியாக

கொள்ளை அடித்தவன்

எல்லாம் அங்கே

பஞ்சு மெத்தையில்

படுத்து புரண்டு

கொண்டு இருக்க - இங்கே

வறுமைக்காக

கொள்ளை அடித்தவனோ

கோமணத்தோடு

தெருக்கோடியில்

நிற்கிறான்!!

புரட்சி செய்

கொள்ளைஅடித்தவன்

பணம் கொள்ளை

போகும் வரை!



கைகளே ஆடையவதும்

கண்ணீரே ஆறாவதும்

நினைத்துக் கொண்டு

சேரியில் சிக்கித்தவிக்கும்

சின்னஞ்சிறு ஏழைகளுக்காக

புரட்சி செய்

சத்தமின்றி சேதி

சொல்லி சலனம்

இல்லது சாதி செய்யும்

சாதியத்தை நோக்கி!



களை எடுப்பதாய்ச்

சொல்லி பயிர்களை

அழித்துக் கொண்டு

இருக்கும் யுத்த

நெறிகள் தகர்ந்தோடிட

புரட்சி செய்

அடக்க நினைக்கும்

அந்நியசக்திகள்

அடங்கி போகும்வரை

புரட்சி செய்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!