27 April 2011

நேசிக்கிறேன் எதிரிகளை!!.....................

நேசிக்கிறேன் எதிரிகளை!!


நேசிக்கிறேன் என்

எதிரிகளை!



வாழ்வில் வெற்றி

பெற நண்பன்

தேவை! - ஆனால்

வாழ்க்கை முழுவதும்

வெற்றி பெற

தேவை - எதிரிதான்!!



வெற்றிக்கு

உதவுபவன் நண்பன்

என்றால் - காரணம்

எதிரியல்லவா



நம்மைவிட

நண்பர்களை விட

நம் செயல்பாடுகளை

கணித்து - நம்மை

வெல்லத்துடிக்கும்

எதிரிகளை

நேசிக்கிறேன் !!



இலக்கை நோக்கி

ஓட உன்னை

உற்சாகபடுத்துபவன் தோழன்



தானும் உறங்காமல்

உன்னையும் உறங்கவிடாமல்

வெற்றியை நோக்கி

ஓட துரத்துபவன்

எதிரி !!



ஆதலால்

நேசிக்கிறேன் எதிரிகளை!!





__._,_.___